மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது…! மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

Author: kavin kumar
25 January 2022, 9:55 pm

டெல்லி : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்தவகையில், 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெல்லாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் தாமோதரன், இசைக்கலைஞர் ஏகேசி நடராஜன், முத்துகண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்