சொத்து சேர்க்காத பிரதமர் மோடி… ஊழலில் திளைக்கும் பாகிஸ்தான் : முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
22 September 2022, 4:36 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்து குறித்து பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக செயல்பட்டு வந்த இம்ரான் கான், அண்மையில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் மூலம் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார்.

இந்த நிலையில், தற்போது பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஒருபுறம், பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மறுபுறம் என பாகிஸ்தானே ஸ்தம்பித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசை விமர்சித்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது :- பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் உள்ள ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளின் மதிப்பு பல மில்லியன் ஆகும். இந்த சொத்துகளின் அளவை யாராலும் கணக்கிட முடியாது.

உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்த அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை. நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள், என பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்