மீண்டும் மணிப்பூரில் பயங்கரம்… வன்முறை வெடித்ததால் பரபரப்பு : வீடுகளுக்கு தீ வைப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 5:34 pm

மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பலர் உயிரிழந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மணிப்பூரின் காமென்லோக் கிராமத்தில் கலவரம் வெடித்துள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற்ற தாக்குதலில் 9 பேர்உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். மேலும் இம்பாலில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 378

    0

    0