பிரதமர் மோடியின் காலில் விழுந்த பப்புவா நியூ கினியா பிரதமர் ; மோடிக்காக விதிகளை மாற்றிய நாடு… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 10:39 am

முதல்முறையாக பப்புவா நியூ கினியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் செய்த செயல் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பப்புவா நியூ கினியாவுக்கு சென்றார். இதன்மூலம், முதல்முறையாக தீவு நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் பப்புவா நியூ கினியாவில் வழக்கமாக வரவேற்பு அளிக்கப்பட மாட்டாது என்பது மரபாகும். அப்படியிருந்தும், உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்குப் பிறகு அங்கு சென்று இறங்கிய பிரதமர் மோடியை மரபுகளை கடந்து அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார். பின்னர், இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக, பிரதமர் மோடியை வரவேற்ற பிரதமர் ஜேம்ஸ் மராப் அவரது பாதங்களைத் தொட்டு வரவேற்றார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி சல்யூட், மரியாதை மற்றும் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, “பப்புவா நியூ கினியாவை அடைந்தேன். விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றதற்காக பிரதமர் ஜேம்ஸ் மாரப்பே அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் ஒரு சிறப்புச் செயலாகும்,” என பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ