பெற்றோர்களே உஷார்… 9 வயது சிறுமியின் உயிரை பறித்த நூடுல்ஸ் : பகீர் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2024, 6:29 pm

குழந்தைகள் அதிகம் விரும்பும் நூடுல்ஸ் உணவால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாமலியை சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி, திடீரென நிலைகுலைந்துள்ளார். தொண்டையில் நூடுல்ஸ் சிக்கிய பின் வாந்தி எடுத்துள்ளார்.

பிறகு மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் அடிமாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கூட, சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுவது, சிறுமியின் தொண்டை அல்லது மூச்சுக்குழாயில் நூடுல்ஸ் சிக்கியிருப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு சென்றுள்ளதாக கூறினர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளா மட்டுமல்லாமல், குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் அதிகம் விரும்பும் உணவுப் பொருளான நூடுல்ஸை இனி கவனத்தோடு கொடுக்க வேண்டும் என்பதே இந்த சம்பவம் பெற்றோர்களுக்கு உணர்த்தியுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 297

    0

    0