பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்… அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
Author: Babu Lakshmanan30 January 2024, 9:48 am
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரச அழைப்பு விடுத்தள்ளது.
ஆண்டுதோறும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாளை தொடங்குகிறது.
நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அடுத்த மாதம் 9ம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது.
பீகாரில் ஆட்சி மாற்றம், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழல்களில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. எனவே, பல்வேறு பிரச்சனைகளி கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.