2வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன செய்தி…!!

Author: Babu Lakshmanan
26 April 2024, 8:42 am

நாடாளுமன்ற தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதிமுதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

மேலும் படிக்க: அடுத்து சென்னை தான்…. ஜுன் 4க்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் கைதாக வாய்ப்பு ; எச். ராஜா போட்ட புதுகுண்டு!!

இந்த நிலையில், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2வது கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பல மொழிகளில் தனது X தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அதாவது, அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?