மீண்டும் ஆட்சியை பிடிக்கும் மோடி அரசு… தமிழகத்தில் பாஜகவின் நிலை என்ன..? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்…!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 1:41 pm

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.

rahul vs modi

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா எனும் கூட்டணியை அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கின்றன. ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பித்த உடன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். அதேபோல, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவியுள்ளார். எனவே, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இதனிடையே, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர், “நாட்டின் மனநிலையை என்னால் அளவிட முடியும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களையும், பாஜகவுக்கு குறைந்தபட்சம் 370 இடங்களையும் கைப்பற்றும்” என்று பிரதமர் கூறினார். மேலும் மூன்றாவது ஆட்சி காலம் வெகு தொலைவில் இல்லை என்றும், அதிகபட்சம் 100-125 நாட்கள் எஞ்சியுள்ளன,” என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து டைம்ஸ் நவ்-மேட்ரைஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 366 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதேசமயம், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி 104 இடங்களையும், மற்ற கட்சிகள் 73 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

வாக்கு விகிதத்தைப் பொறுத்த வரையில், தேசிய ஜனநாயக கூட்டணி 41.8 சதவீத வாக்குகளை கைப்பற்றும் என்று சொல்லப்படுகிறது. இண்டியா கூட்டணி 8.6 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகள் 29.6 சதவீத வாக்குகளையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வெற்றி பெற்றது.

மாநில வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசம்
மொத்த இடங்கள் : 80
பாஜக : 77
இண்டியா கூட்டணி: 3
பகுஜன் சமாஜ்: 0
மற்றவை: 0

உத்தரகாண்ட்
மொத்த தொகுதிகள் : 5
பாஜக: 5
காங்: 0
மற்றவை: 0

மத்தியப் பிரதேசம்
மொத்த இடங்கள் – 29:
பாஜக: 28
காங்: 1
மற்றவை: 0

இமாச்சலப் பிரதேசம்
மொத்த இடங்கள்- 4
பாஜக: 3
காங்: 1
மற்றவை: 0

டெல்லி
மொத்த இடங்கள்: 7
பாஜக: 7
ஆ,ம் ஆத்மி : 0
காங்: 0
மற்றவை: 0

பஞ்சாப்
மொத்த இடங்கள்: 13
ஆம் ஆத்மி : 05
பாஜக: 03
காங்: 03
ஷிரோமனி அகாலி தளம்: 01
மற்றவை: 0

ஹரியானா
மொத்த இடங்கள்: 10
பாஜக: 9
காங்: 1
மற்றவை: 0

ராஜஸ்தான்
மொத்த இடங்கள்: 25
பாஜக: 25
காங்: 0
மற்றவை: 0

குஜராத்
மொத்த இடங்கள்: 26
பாஜக: 26
காங்: 0
ஆம் ஆத்மி : 0
மற்றவை: 0

சத்தீஸ்கர்
மொத்த இடங்கள்: 11
பாஜக: 11
காங்: 0
மற்றவை: 0

பீகார்
மொத்த இடங்கள்: 40
தேசிய ஜனநாயக கூட்டணி : 35
இண்டியா கூட்டணி : 5
மற்றவை: 0

ஜார்கண்ட்
மொத்த இடங்கள்: 14
தேசிய ஜனநாயக கூட்டணி: 13
இண்டியா கூட்டணி: 1
மற்றவை: 0

ஆந்திரா:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்: 19
டிடிபி-ஜன சேனா: 6

ஒடிசா
மொத்த தொகுதிகள் : 21
பாஜக: 11
பிஜு ஜனதா தளம் : 9

தமிழ்நாடு
மொத்த இடங்கள்: 39
பாஜக: 1
இண்டியா கூட்டணி : 36
அதிமுக: 2
மற்றவை: 0

வட இந்திய மாநிலங்களில் வெற்றி வாகை சூடி 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவித்தாலும், பாஜகவுக்கு தமிழகத்தில் இந்த முறையும் ஏமாற்றம் என்றே தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு 36 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான அதிமுகவுக்கு வெறும் 2 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 386

    0

    0