உலகமே இந்தியாவை உற்றுப் பார்க்கிறது… இது முக்கியமான தருணம்.. எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்..!!
Author: Babu Lakshmanan7 December 2022, 11:32 am
தற்போதைய சூழலில் இந்தியாவை உலகமே உற்றுப் பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது :- குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இன்று. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள சூழல், தற்போது கூட்டத் தொடர் கூடுகிறது. எனவே, இது முக்கியமானதாகும். இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஜி20 மாநாடு என்பது சாதாரண தூதரக நிகழ்ச்சி கிடையாது. இந்தியாவின் திறமையை உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டுவதற்கான பெரிய வாய்ப்பு. இந்த மாநாட்டின் மூலம் இந்தியாவை பற்றி உலகமே தெரிந்து கொள்ள செய்வதற்கான அரிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமாக முடிவுகள் எடுக்கவும் இந்தக் கூட்டத் தொடரில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும், எனக் கூறினார்.
0
0