பயணிகள் அவதி…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை : ஊழியர்கள் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2024, 11:06 am

பயணிகள் அவதி…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை : ஊழியர்கள் ஷாக்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றாக தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்துள்ளனர்.

விடுப்பு எடுத்த ஊழியர்கள் தங்களின் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து இருந்தனர். அவர்களைத் தொடர்புகொள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முயற்சி செய்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உயிரை காவு வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு.. பெற்ற ஒரு மகனையும் இழந்த பெற்றோர்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தினால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!