ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவு.. பேடிஎம் சிஇஓ எடுத்த திடீர் முடிவு!

Author: Hariharasudhan
11 October 2024, 5:19 pm

ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவை பேடிஎம் சிஇஓ தற்போது நீக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

மும்பை: இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா புதன்கிழமை நள்ளிரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 86 வயதான இவர், இறக்கும் தருவாயில் டாடா அறக்கட்டளைகளின் தலைவராகவும், எமிர்ட்டஸின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இறக்கும் வரை திருமணமாகாத இவரது வாழ்க்கையில், அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு ஏற்றார் போன்று உற்பத்தி பொருட்களை அறிமுகம் செய்து வைத்தவர்.

இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பேடிஎம் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா இரங்கல் குறிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Ratan Tata

அதில், “ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த அவர் ஒரு மாமனிதர். அனுபவம் வாய்ந்த ஒரு தொழிலதிபருடனா கலந்துரையாடல்களை அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் இழந்துள்ளனர். வீர வணக்கம் சார்.. சரி, டாடா பாய் பாய் (Ok Tata Bye Bye) என பதிவிட்டிருந்தார். இது நெட்டிசன்கள் மத்தியில் எதிர் கருத்துகளை வரவழைத்தது.

இதையும் படிங்க: டாடா அறக்கட்டளை தலைவராக ரத்தன் டாடா சகோதரர்.. யார் இந்த நோயல் டாடா?

இந்த நிலையில், அந்த பதிவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா நீக்கியுள்ளார். தற்போது இது பேசுபொருளாகியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ