ஆபத்தில் உதவி செய்தவருக்கு அபராதம் போடுவதா? அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மாவால் சங்கடத்தில் வாகன ஓட்டிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2023, 7:30 pm

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் டூப்பர் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம்.

இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து உலக இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதா பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் அமிதாபச்சன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்திருப்பது குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதாவது, நேற்று காலையில் அமிதாப்பச்சன் அவர்கள் அவசர அவசரமாக தன்னுடைய வேலைக்கு சென்று இருக்கிறார்.

ஆனால், அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கிறார். பின் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் அமிதாப்பச்சன் காரை விட்டு இறங்கி அந்த வழியாக இரு சக்கர வாகன நபரிடம் உதவி கேட்டு இருக்கிறார்.

அதன் பின் அவருக்கு அமர்ந்து அமிதா பச்சன் பயணம் செய்திருக்கிறார். மேலும், அமிதாபச்சன் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்திருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டியும் ஹெல்மெட் அணியவில்லை. அவர் தொப்பி தான் அணிந்திருந்தார்.
இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த புகைப்படத்தை அமிதாபச்சன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, சரியான நேரத்தில் பணிக்கு செல்ல உதவிய மஞ்சள் நேரத்தில் சர்ட் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு நன்றி என்று கூறியிருந்தார்.

இதேபோல் நடிகை அனுஷ்கா சர்மாவும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் பின்னாடி அமர்ந்து பயணம் செய்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ, புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அமிதாப்பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மாவை விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாகவே டிராபிக் விதிமுறையின் படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மீறினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், அமிதாப்பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மா இவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மாவை அழைத்து வந்த வாகன ஓட்டிக்கு ரூ.10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது மகாராஷ்டிரா போலீஸ். இதே போல அனுஷ்கா மற்றும் அமிதாப் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 415

    0

    0