வெள்ளத்தால் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா மக்கள் : ₹1 கோடி நிவாரணம் வழங்கிய பாலகிருஷ்ணா!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 10:59 am

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா தனது எக்ஸ் பக்கத்தில் 50 வருடங்களுக்கு முன் என் நெற்றியில் என் தந்தை மூலம் வைக்கப்பட்ட திலகத்தின் மூலம் சினிமா துறையில் இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
50 வருடங்களாக என் நடிப்பு வாழ்க்கை தொடர்கிறது ஒளிர்கிறது.

இது தெலுங்கு மக்களின் ஆசியோடு பின்னிப் பிணைந்த பந்தம் இந்த கடன் தீராதது.
இந்தப் பிறவி உங்களுக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக. இந்த பயணத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

தற்போது ஆந்திரா, தெலங்கானா இரண்டு தெலுங்கு மண்ணில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கனத்த இதயத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹ .50 லட்சமும், தெலுங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹.50 லட்சமும் வழங்குகிறேன்.

இரு மாநிலங்களிலும் விரைவில் இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா
பதிவு செய்துள்ளார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!