அமலாக்கத்துறைக்கு அனுமதி… மீண்டும் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2024, 4:43 pm
Kejriwal - Updatenews360
Quick Share

அமலாக்கத்துறைக்கு அனுமதி… மீண்டும் கெஜ்ரிவாலில் காவல் நீட்டிப்பு : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

அந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் மேலும் 4 நாட்களுக்கு கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி அமலாக்கத்துறையின் காவலில் கெஜ்ரிவால் இருப்பார்.

இதற்கு முன்னதாக, சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு, இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 244

    0

    0