நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…!

Author: kavin kumar
24 January 2022, 10:56 pm

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என சங்கர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி மனுதாக்கல் செய்த சங்கர் என்பவரே, தற்போது தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சங்கரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்கனவே உத்தரவிட்டியிருந்த நிலையில், தற்போது அவகாசம் கேட்டு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 5347

    0

    0