பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய PFI… பீகாரில் தப்பிய குறி…. அமலாக்கத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!
Author: Babu Lakshmanan24 September 2022, 2:28 pm
பிரதமர் மோடியை கொலை செய்ய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா திட்டம் தீட்டியதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத பயிற்சி அளித்தல் மற்றும் முறைகேடான பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மீது எழுந்தன.
இதன் அடிப்படையில், தமிழகம், கேரளா உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று முன்தினம் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் அந்த இரு அமைப்புகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஷபீக் பயேத் என்பவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.
அதாவது, கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி பிரதமர் மோடி பீகார் மாநிலம் பாட்னாவுக்கு பயணம் செய்தார். அந்தக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சதித் திட்டம் தீட்டி இருப்பாகவும், இதற்காக, ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை சேகரித்து வைத்திருந்ததாகவும் அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டி இருக்கிறது.
மேலும், இந்த அமைப்பினால் பல ஆண்டுகளாக ரூ.120 கோடி ரூபாய் திரட்டப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பிப்ரவரி 2020-ல் டெல்லி கலவரங்களுக்கு வழிவகுத்த பிரச்னைகள், ஹத்ராஸுக்கு பி.எஃப்.ஐ. உறுப்பினர்கள் வருகை உள்ளிட்டவற்றிற்கு இந்த ரொக்கம் பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.