2 நாள் பயணமாக கேரளா வந்த பிரதமர் மோடி… நேரில் வரவேற்ற முதலமைச்சர் பினராயி விஜயன் ; நாளை குருவாயூரில் சுவாமி தரிசனம்.!!

Author: Babu Lakshmanan
16 January 2024, 8:46 pm

2 நாள் பயணமாக கேரளாவுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார்.

கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மோடி தனது X தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஆந்திராவுக்கு சென்ற அவர், லெபாக்ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஜனை பாடினார்.

பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா 22ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபாக்ஷிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி கொச்சி விமான நிலையம் வந்த அவரை, ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். நாளை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும், திரிபிராயர் ராமசாமி கோவிலுக்கும் பிரதமர் மோடி செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 409

    0

    0