பாஜக கூட்டத்துக்காக மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி.. ஓடோடி வந்த மம்தா பானர்ஜி : திடீர் சந்திப்பால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2024, 9:21 pm
பாஜக கூட்டத்துக்காக மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி.. ஓடோடி வந்த மம்தா பானர்ஜி : திடீர் சந்திப்பால் பரபரப்பு!
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இதன்மூலம் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ஜனாதிபதி அல்லது பிரதமர் யார் வந்தாலும் அவர்களை மாநில முதலமைச்சர் மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம்.
எனவே இது ஒரு சம்பிரதாய சந்திப்பு. இந்த சந்திப்பில் எந்த அரசியலும் பேச நான் வரவில்லை. ஏனெனில் இது அரசியல் சந்திப்பு இல்லை என தெரிவித்தார்.