அந்த விஷயத்தில் கிறிஸ்துவ சமூகம் தான் முன்னோடி… கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரதமர் மோடி புகழ்ச்சி…!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 6:26 pm

ஏழைகளும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்வதில் முன்னோடியாக இருப்பது கிறிஸ்துவ சமூகம் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கோலாகலமாக உற்சாகக் கொண்டப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதல் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவ மக்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கிறிஸ்துவ மக்களுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். டெல்லியில் தனது இல்லத்தில் கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்துவ மக்களை சந்தித்து பேசிய அவர்,பிரதமர் மோடி கூறியதாவது:- கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தையும் அவரது போதனைகளையும் கொண்டாடும் நாள் இது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இயேசு கிறிஸ்து பாடுபட்டார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது.

கிறிஸ்தவர்கள் சமூக நீதியின் பக்கம் நிற்பவர்கள். நாட்டிற்கு கிறிஸ்தவர்கள் அளித்த பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போப் பிரான்சிஸ்சை சந்தித்தது மறக்க முடியாத தருணம் அதுவாகும். புனித பைபிளில் உண்மைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 364

    0

    0