அம்பானியும், அதானியுமா..? நிரூபித்து காட்டினால் என்னை தூக்கில் போடுங்கள் ; பிரதமர் மோடி சவால்
Author: Babu Lakshmanan17 May 2024, 5:06 pm
நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது :- நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா, பிர்லாவுக்கு ஆதரவானவர் என விமர்சித்தார்கள். இப்போது நேரு குடும்பமே என்னை அம்பானி – அதானிக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டுகிறது.
சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை அழைத்திருந்தேன். சாதனையாளர்களை கவுரவிக்காமல் மதிப்பளிக்காமல் எப்படி இருக்க முடியும்? அப்படி செய்யாவிட்டால் எப்படி விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்?
மேலும் படிக்க: பெண் போலீசாரை விமர்சித்தது தப்புதான்… இப்போ அதை உணர்ந்துட்டேன் ; போலீஸில் சவுக்கு சங்கர் வாக்குமூலம்!!
நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்.இந்த நாட்டுக்கு வளம் சேர்க்கக் கூடிய தொழிலதிபர்களை நான் மதிக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலாளர்கள் குறித்து சம அளவில்தான் நான் அக்கறையும் கவலையும் கொள்கிறேன். பா.ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையம் எப்போதும் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை பயனற்ற அமைப்பாக இருந்தது. ஆனால் தற்போது அமலாக்கத்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது, எனக் கூறினார்.