உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 3வது நாளாக இன்று தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைனை சூறையாடி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தத் தாக்குதலில் இதுவரையில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யா தரப்பில் 3500 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தலைநகர் கிவ்-வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறியுள்ளன. டாங்கிகள், போர் விமானங்களின் மூலம் கிவ்வில் உள்ள முக்கிய ராணுவப் பகுதிகளை தாக்கி வருகின்றன.
ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
இதனிடையே, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, உக்ரைன் ராணுவம் களத்தில் நின்று திடகார்த்தமாக போரிட்டு வருவதாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஷ்கி அடிக்கடி வீடியோ வெளியிட்டு நம்பிக்கை கொடுத்து வருகிறார். அதேவேளையில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஷ்கி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கான ஆதரவை வழங்குமாறும், ரஷ்யாவின் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் உள்ளதால், அவர்களை தடுத்து நிறுத்த ஒன்றிணைய வருமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது, இருநாடுகளிடையேயான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
உக்ரைன் அதிபருடனான உரையாடலுக்கு பிறகு, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இருநாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.