என்னோட காலில் விழக் கூடாது… பதிலுக்கு பாஜக நிர்வாகியின் காலில் விழுந்த பிரதமர் மோடி : உ.பி.யில் சுவாரஸ்யம்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
21 February 2022, 12:38 pm

உத்தரபிரதேசத்தில் தனது காலில் விழுந்த பாஜக நிர்வாகிக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி, பதிலுக்கு அவரது காலை தொட்டு வணங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், எஞ்சிய கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, உன்னவ் பகுதியில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை வழங்கினர்.

அதனை பெற்றுக் கொள்ளும் போது, அவதேஷ் கட்டியார் பிரதமர் மோடியின் காலில் விழுந்தார். அப்போது, பிரதமர் மோடி உடனே தன்னுடைய கால்களைத் தொட வேண்டாம் என்று சைகை காட்டியதுடன், பதிலுக்கு அவரது கால்களை தொட்டு வணங்கினார்.இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1626

    0

    0