காங்.,சை தமிழக மக்கள் புறக்கணித்து 55 வருடங்கள் ஆச்சு.. பிரதமர் மோடி பதிலடி : நாடாளு., மீண்டும் அனல் பறந்த தமிழக விவகாரம்!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
7 February 2022, 8:27 pm

டெல்லி : 1967ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்துடன் ஒப்பிட்டு பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். அதாவது, உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது என்று அதிரடியாக பேசினார். அவரது இந்தப் பேச்சு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் உரையை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது : அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, அதனைப் பற்றி கவலைப்படவே இல்லை. மிகவும் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் குறைவு. 1967ம் ஆண்டுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. இதனை புரிந்து கொள்ளாமல் விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை.

24 ஆண்டுகளுக்கு முன்பு நாகலாந்திலும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவிலும் ஆட்சி பறிபோனது. திரிபுரா, மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் ஆட்சி பல ஆண்டுகளுக்கு முன்பே போய் விட்டது. தெலுங்கானாவை உருவாக்கியதற்கு நீங்கள் பெருமை கொள்கிறீர்கள். ஆனால் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஊழல் செய்ய முடியவில்லை என்பதால் சிலருக்கு மேக் இன் இந்தியா திட்டம் என்றால் பிடிக்கவில்லை. பாதுகாப்புத் துறையில் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க நாங்கள் முயற்சி செய்துள்ளோம், எனக் கூறினர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!