நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களம் இறக்கப்பட்டார்.
பிரதமர் மோடி கடந்த மூன்று முறையும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் வாக்கில் மோடி முன்னிலை பெற்றார். அதனை தொடர்ந்து, அடுத்த சுற்றில் பிரதமர் மோடி திடீரென பின்னடைவை சந்தித்தார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்யை விட 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் மோடி உள்ளது குறிப்பிடத்தக்கது.