இதுதான் எங்களின் ஒரே இந்தியா… அருணாச்சலப் பிரதேசத்தில் ஒலித்த தமிழ்… வீடியோவை பகிர்ந்து நெகிழ்ந்த பிரதமர் மோடி…!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 8:14 pm

அருணாச்சல பிரதேசத்தில் பாரதியார் பாடலை தமிழில் பாடிய இரு பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியர்களிடையே, விடுதலை வேட்கை உணர்வை தனது பாடல்கள் மூலம் தூண்டியவர் மகாகவி பாரதியார். இவரின் புகழ் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. பிரதமர் மோடியும் பல மேடைகளில் பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டும் பேசியுள்ளார்.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பாரதியார் பாடலை தூய தமிழில் அற்புதமாக பாடியுள்ளனர். இந்த வீடியோவை அம்மாநில முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை பகிர்ந்த பிரதமர் மோடி, “இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்.” என தமிழில் பாராட்டி நெகிழ்ச்சியடைந்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ