தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்க பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சிக்கு வந்தார். அவருக்க கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது :- நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் மக்கள் செய்வார்கள். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும். தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி எடுபடாது ; திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்.
திமுக – காங்கிரஸ் இண்டியா கூட்டணி தமிழ்நாட்டில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. திமுக – காங்கிரஸ் இண்டியா கூட்டணி கொள்கையே ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இலக்கு ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதிலும் கூட ஊழல் செய்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட மக்களை எப்படியெல்லாம் சுரண்டலாம் என திமுக – காங்கிரஸ் இணைந்துள்ள இண்டியா கூட்டணி காத்து கொண்டிருக்கிறது. மார்த்தாண்டம் – பார்வதிபுரம் இடையே மேம்பாலம் வேண்டும் என குமரி மக்கள் பல ஆண்டுகளாக போராடினார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குமரி மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பாஜக அரசு வந்த பிறகு தான் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரியில் ஏற்பட்டிருக்கும் ஆதரவு அலையைப் பார்த்து டெல்லியில் எதிர்கட்சிகளுக்கு தூக்கம் கெட்டுவிட்டது. திமுக, காங்கிரஸ் செய்த தப்புக்கும், பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாய் மூடிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கை டிவியில் காட்ட கூட திமுக அரசு தடை விதித்தது, எனக் கூறினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.