தேசிய பஞ்சாயத்து ராஜ்தின கொண்டாட்டம்: பிரதமர் மோடி இன்று ஜம்மு – காஷ்மீர் பயணம்…புதிய திட்டங்களுக்கு அடிக்கல்..!!

Author: Rajesh
24 April 2022, 8:38 am

புதுடெல்லி: தேசிய பஞ்சாயத்து ராஜ்தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார்.

இன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். அங்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களை நெருக்கமாகக் கொண்டுவர உதவுகின்ற பனிஹால் க்வாசிகண்ட் சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், தில்லி – அமிர்தசரஸ் – கோத்ரா விரைவு ப் பாதைக்கான மூன்று சாலைத் திட்டங்களுக்கும் ராட்லே & க்வார் புனல்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தலை நோக்கமாகக் கொண்ட அம்ரித் சரோவர் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 1249

    0

    0