2014-ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் முடிவுக்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 7:12 pm

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் காரசாரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களிடம் அச்சத்தை உருவாக்க கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

மக்களால் மிகவும் விருப்பப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். அறுதி பெரும்பான்மையுடன் மக்கள் முறை தேர்ந்தெடுத்துள்ளனர். 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் மோடி முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார்.

நரசிம்மராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதாயம் காட்டி காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. வாஜ்பாய்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது பாஜக அதை செய்யவில்லை என கடந்த கால காங்கிரஸ் அரசு மீது அமித்ஷா சரமாரி குற்றசாட்டை முன்வைத்தார்.

மேலும், அமித்ஷா கூறுகையில், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி அதிக பெண்கள் சமைக்க தொடங்கினார்கள். 11 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் மோடி ஆட்சியில் கட்டப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி ஓய்வில்லாமல் நாளொன்றுக்கு 17 மணி நேரம் உழைத்து வருகிறார். விவசாயிகள் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கி வருவது மோடி அரசுதான். 2004-2014 வரை ரூ.70,000 கோடி விசய கடன் காங்கிரஸ் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால், மோடி ஆட்சியில் விவசாயிகள் கடன் வாங்க அவசியமே ஏற்படவில்லை என்றார். மேலும், ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அளவுக்கு இலவச மருத்துவ காப்பீடு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, ஜன்தன் திட்டம் மூலமாக மத்திய அரசின் சலுகைகள் மக்களுக்கு நேரடியாக போய் சேருகிறது என கூறி திட்டங்களுக்கு பெயர் வைப்பதே உங்கள் வேலையாக இருந்தது, ஆனால் செயல்படுத்தியது நாங்கள் தான் என காங்கிரஸ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அமித்ஷா எடுத்துரைத்தார்.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 352

    0

    0