அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு : 18 லட்சம் தீப உற்சவத்தில் பங்கேற்று தீபாரதனை காட்டி பக்தி பரவசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 6:46 pm

அயோத்தி: 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, அயோத்தி சென்றடைந்தார். அங்கு ராமர் கோயிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் சென்றார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்ற மோடி, மாலை 5 மணியளவில் பகவன் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தார். பிறகு, ஸ்ரீராமஜென்மபூமியை ஆய்வு செய்தார்.

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை மோடி மேற்கொள்கிறார். 6:30 மணிக்கு சரயு நதியின் புதிய படித்துறையில் நடக்கும் பிரம்மாண்டமான ஆரத்தியை பார்வையிடுகிறார். சரயு நதி படித்துறையில் பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையும் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடக்கும் தீப உற்சவத்தில் முதன் முதலில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.

  • Prabhas’ Mother Shares His Personal Struggles நடிகர் பிரபாஸ் திருமணம் செய்யாமல் இருப்பது எதனால் தெரியுமா…அவர் அம்மா சொன்ன தகவலால் ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 536

    0

    0