இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3 நிகழ்வுகளில் 40 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆணை கூட இன்னும் பிறப்பிக்கப்படாத நிலையில் அடுத்தக்கட்டமாக மேலும் 6 மீனவர்களை இலங்கைப் படைகள் கைது செய்துள்ளன.
தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்நிகழ்வாகி விட்டன. இலங்கைப் படையினரின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
This website uses cookies.