ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்தில் விஷவாயு கசிவு : ஊழியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 9:38 am

ஆந்திர மாநிலம் அணக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் “காண்டிக்ஸ்” என்ற பெயரிலான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் அருகில் மருந்து தயாரிப்பு கம்பெனி ஒன்று உள்ளது. அச்சுதாபுரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நேற்று மாலை வெளிப்பட்ட விஷவாயு அந்த பகுதி முழுவதும் பரவியது.

இரண்டு நிறுவனங்களிலும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். விசவாயு பரவியதும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால் காண்டிக்ஸ் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விஷவாயுவை சுவாசித்து மயக்கம் அடைந்தனர்.

மயக்கம் அடைந்த பெண் ஊழியர்கள் உடனடியாக சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கு தற்போது தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விஷவாயு கசிவு பற்றிய தகவல் அறிந்து மாவட்ட உயரதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!