முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு குறித்து அவதூறு பேச்சு… போலீஸ் கான்ஸ்டபிள் கைது..!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 8:44 am

முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், அவரை பற்றியும், அவரது குடும்பம் மற்றும் அரசுக்கு எதிராக பொதுவெளியில் தரக்குறைவாக போலீஸ் கான்டபிள் ஒருவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து கந்தி நகர காவல் ஆணையாளர் ராணா டாடா கூறும்போது, என்.டி.ஆர். மாவட்டத்தில் பெட்ரோல் பம்ப்பில் கிராமவாசி ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் தன்னேரு வெங்கடேஷ்வரலு என்பவர் பேசிக் கொண்டிருந்த போது, ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசுக்கு எதிராக அவதூறாக பேசியுள்ளார்.

அவரது பேச்சுகள் சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பொறுப்புள்ள அரசு ஊழியர் ஒருவர் பேசுவது ஒரு குற்றம், எனவே, அவரை கைது செய்துள்ளோம். கான்ஸ்டபிளை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பின் ஜக்கையாபேட்டையில் உள்ள கூடுதல் ஜுடிசியல் முதல் தர கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது, என தெரிவித்தார்.

இதனிடையே, விஜயவாடா நகர போலீஸ் ஆணையாளர் உத்தரவின்பேரில் உடனடியாக கான்ஸ்டபிள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 331

    0

    0