”இன்னைக்கு ஒரு புடி”… காவல் நிலையத்தில் கூட்டாஞ்சோறு சமைத்த காவலர்கள் : சிக்கனால் எழுந்த சிக்கல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2023, 5:03 pm

”இன்னைக்கு ஒரு புடி”…காவல்நிலையத்தில கூட்டாஞ்சோறு சமைத்த காவலர்கள் : சிக்கனால் எழுந்த சிக்கல்!!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், காவல் நிலைய வாகனத்தில் கடைக்கு சென்று சிக்கன் வாங்கி, அதனை எடுத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து சிக்கன் மற்றும் கிழங்கை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இந்த காட்சிகளை முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். பதிவிட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த காவல் நிலைய சமையல் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது .

பலரும் இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பும் அளித்து நல்ல விதமான கமெண்ட்களையும் பதிவு செய்து வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, இந்த சமையல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து, பணிநேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து சமையல் செய்தது மற்றும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நிலைய காவலர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், காவல்நிலைய வாகனத்திலேயே சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து அதனை காவல் நிலையத்திலேயே வைத்து சமைத்து எல்லா காவல் அதிகாரிகளும் ரசித்து சமைத்து ருசித்தது வீடியோவாக எடுத்து பதிவிட்டு பொறுப்பற்ற நிலையில் காவல் நிலையத்தில் செயல்பட்ட அந்த வீடியோ வைரல் காட்சிகள் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

பணி நேரத்தில் பொறுப்பற்ற வகையில் ரீல்ஸ் போடுவது அவர்களின் அலட்சியத் தன்மையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதையோ செய்ய நினைத்தது இப்படி வசமாக மாட்டிகொண்ட காவலர்கள் செயல்தான் கேரளாவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 350

    0

    0