வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோ… கழிவறையில் கலால் வரித்துறை அதிகாரி செய்த வேலை : ஆட்சியரிடம் பறந்த புகார்.. அதிரடி நடவடிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2022, 9:35 pm
மத்தியப் பிரதேசத்தில் கலால் வரித்துறை அதிகாரி ஒருவர் தனது அலுவலகக் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வாவில் கலால் துறையில் உதவி மாவட்ட கலால் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஹிர்வார். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் இருக்கும் அலுவலத்தின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்தார் அஹிர்வார்.
24 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வீடியோவை அஹிர்கார் டெலிட் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து குழுவில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ டெலிட் செய்யப்பட்டதாக மாவட்ட கலால் அதிகாரி விகாஸ் மாண்ட்லோய் தெரிவித்தார். இந்த தகாத நடவடிக்கைக்காக அஹிர்காரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி அஹிர்வார், தான் ஒரு சதித்திட்டத்தில் சிக்கியதாகக் கூறினார். “நான் வீடியோவை பகிரவில்லை. நான் அலுவலகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றபோது, யாரோ ஒருவர் எனது தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்” என்று அஹிர்வார் கூறினார்.