ஒரு எம்எல்ஏ கூட எனக்கு எதிராக இருந்தாலும் அவமானம்… பதவி முக்கியமல்ல, மக்களின் அன்பு தான் சொத்து : உத்தவ் அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 7:43 pm

மகாராஷ்டிரா அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியில் அமைச்சர் உட்பட 13 எமஎம்லஏக்கள் குஜராத்தில் முகாமிட்டிருந்த நிலையில் அசாமில் தற்போது முகாமிட்டுள்ளனர். சிவசேனா எம்எல்ஏக்கள் தொடர்பில் இல்லாமல் இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கட்சியுடன் ஆலோசனை செய்ய விருந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ்தாக்கரேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இன்று சமூக வலைதளம் மூலம் பேசினார்.

அப்போது பேசிய அவர், சிவசேனா தமது இந்துத்துவா கொள்கையை ஒருபோதும் கைவிட்டது இல்லை. சிவசேனா இந்துத்துவா கொள்கையில் இருந்து விலகிச் சென்றதும் இல்லை. இந்துத்துவா என்பது எங்களது மூச்சு. இந்துத்துவா என்பது எங்களது ஆன்மா.

மகாராஷ்டிராவில் இருந்து வெளியே சென்று எம்.எல்.ஏக்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு திரும்பி வருவதாக கூறியுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நான் முதல்வராக இருக்கக் கூடாது என கூறினால் அது வேறு விவகாரம்.

இன்று காங்கிரஸ் கட்சியின் கமல்நாத்தும் கூட நான் முதல்வராக தொடர வேண்டும் என்கிறார். ஆனால் என்னுடைய கட்சியினர் நான் முதல்வராக இருக்கக் கூடாது என்று சொல்வது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதம் தயாராகவே உள்ளது.என்னுடன் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் இருக்கும் வரை எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

சிவசேனா எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்களா? அவர்களாகவே சென்றார்களா? என்பது தொடர்பான பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவும் இல்லை. முதல்வர் பதவி என்பது வரும் போகும்; ஆனால் மக்கள் வைத்துள்ள பற்றுதான் அசைக்க முடியாத சொத்து. கடந்த 2 ஆண்டுகள் மக்களின் பேரன்பை போதுமான அளவு பெற்றிருக்கிறேன்.

எம்.எல்.ஏக்கள் ஆதரவு எண்ணிக்கை பிரச்சனை இல்லை; எனக்கு எதிராக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு எம்.எல்.ஏ. அல்லது ஒரே ஒரு நபர் எனக்கு எதிராக இருந்தாலும் நான் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுகிறேன்.

ஒரே ஒரு எம்.எல்.ஏ. எனக்கு எதிராக இருந்தாலும் அது எனக்கு அவமானம். சிவசேனாவை சேர்ந்த யார் ஒருவரும் முதல்வராக முடியும். நேருக்கு நேராக என்னிடம் சொல்லுங்கள்.. நான் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராகத்தான் இருக்கிறேன். எனக்கு சிலர் துரோகம் செய்துவிட்டதாக நான் கருதுகிறேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ