மொராக்கோவை தொடர்ந்து திரிபுராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறி ஓடிய மக்கள்!!!
சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்பொழுது, திரிபுராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 3.48 மணியளவில் திரிபுராவின் வடக்கு திரிப்புரா மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மநகருக்கு வடகிழக்கே 72 கிமீ தொலைவில், 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 43 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், மொராக்கோ நாட்டின் மாரகேஷ் நகரத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 632ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காயமடைந்த 300 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது.
மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் இந்தவலுவான நடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.