லட்சியத்தை நோக்கி தினமும் 10 கி.மீ. ஓட்டம் : இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞன்… யார் இந்த பிரதீப் மெஹ்ரி..?

Author: Rajesh
21 March 2022, 2:14 pm

நொய்டா: ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்ற 19 வயது இளைஞர் ஒருவர் தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி லட்சக்கணக்காக லைக்குகளை குவித்து வருகிறது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்து நாட்டிற்காக பணியாற்றி வருகின்றனர். மேலும், பல லட்சம் இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. ராணுவத்தில் சேர எழுத்து தேர்வு, உடல் தகுதி என பல தகுதிகள் தேவை என்பதால், அதற்காக தீவிர பயிற்சி வேண்டும் என்பது முக்கியமாகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரான வினோத் காப்ரி என்பவர் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் ராணுவத்தில் சேர தன்னை தயார் படுத்திக் கொள்ளும் முறை குறித்த தகவல் காண்போர் கண்களை ஆச்சர்யத்தில் விரிக்கச் செய்கிறது.

அந்த வீடியோவில், 19 வயது சிறுவன் பிரதீப் மெஹ்ரா இரவுநேர நொய்டா சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறான். இதை பார்த்த அந்த வழியாக சென்ற திரைப்படத் தயாரிப்பாளர் வினோத் கப்ரி அவரை காரில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறுகிறார்.

அந்த வீடியோவில் வினோத் காப்ரி மற்றும் இளைஞர் பிரதீப் பேசும் உரையாடல் இதோ..

வினோத் காப்ரி : வண்டியில ஏறு உன்னை வீட்ல ட்ராப் பண்ணுறேன்

இளைஞர் : இல்லை நான் ஓடியபடியே வீட்டிற்கு சென்றுவிடுவேன்

வினோத் காப்ரி: ஏன் ஓடியபடி போகிறாய்?

இளைஞர் : எப்பொழுதும் என் வீட்டிற்கு நான் ஓடி தான் செல்வேன்,

வினோத் காப்ரி: எங்க வேலை பார்க்கிறாய்?

இளைஞர் : மெக் டோனால்ட்ஸ் செக்டார் 16

வினோத் காப்ரி: என் காருல ஏறு நான் உன்னை டிராப் பண்ணுறேன்

இளைஞர் : இல்ல வேணாம் அப்புறம் எனக்கு ஓட நேரம் கிடைக்காது

வினோத் காப்ரி: எதற்காக ஓடுகிறாய்?

இளைஞர்: ராணுவத்தில் சேர

வினோத் காப்ரி : உன் பெயர் என்ன?

இளைஞர் : பிரதீப் மெஹ்ரா

வினோத் காப்ரி : சொந்த ஊர் எது?

இளைஞர் பிரதீப்: உத்தரகண்ட் அல்மோரா

வினோத் காப்ரி: நீ ஏன் காலை நேரத்தில் ஓடக்கூடாது?

இளைஞர் பிரதீப்: காலையில் எனக்கு வேலை இருக்கும் சமைக்கவே நேரம் சரியாக இருக்கும்

வினோத் காப்ரி: உன் வயது என்ன?

இளைஞர் பிரதீப்: 19

வினோத் காப்ரி: உன் பெற்றோர்கள் எங்கே?

இளைஞர் பிரதீப்: வீட்ல இருக்காங்க, அம்மா மருத்துவமனையில இருக்காங்க…

வினோத் காப்ரி: நீ யாருடன் தங்கியிருக்கிறாய்?

இளைஞர் பிரதீப்: என் சகோதரர் உடன்

வினோத் காப்ரி: இந்த வீடியோ வைரலாகும்..நீயும் வைரலாக போகிறாய்

இளைஞர் பிரதீப்: என்னை யாருக்கு தெரிய போகுது?

வினோத் காப்ரி: வைரலானால் என்ன ஆகும்?

இளைஞர் பிரதீப்: எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் எந்த தப்பும் பண்ணல

வினோத் காப்ரி: ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் ஓடுகிறாய்?

இளைஞர் பிரதீப் : 10 கி.மீ..செக்டார் 16ல் இருந்து பரோலா வரை

வினோத் காப்ரி: ஓ மை காட்..எப்ப சாப்பிடுவ?

இளைஞர் பிரதீப் : வீட்டிற்கு போனதும் சமைத்து சாப்பிட வேண்டும்

வினோத் காப்ரி: இன்னிக்கு என் கூட வந்து டின்னர் சாப்பிடு

இளைஞர் பிரதீப்: இல்லை என் சகோதரன் வீட்டில் காத்துக்கொண்டிருப்பான்

வினோத் காப்ரி: உன் சகோதரன் சமைத்துக் கொள்ள மாட்டாரா?

இளைஞர் பிரதீப்: அவன் நைட் டூட்டி பார்க்கிறான்

வினோத் காப்ரி : நான் உன்னை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். நான் உன்னைய வீட்ல டிராப் பண்ணுறேனே

இளைஞர் பிரதீப் : இது எனது தினசரி பயிற்சி…அப்படி பண்ணா என் பயிற்சி பாதிக்கப்படும்.வேண்டாம்

வினோத் காப்ரி: ஆல்தி பெஸ்ட் பிரதீப்

என பேசுகிறார். ராணுவத்தில் சேருவதற்காக ஒரு இளைஞர் தன் குடும்ப கஷ்டங்களையும் மீறி இவ்வளவு விஷயம் செய்கிறார் என பலர் பிரதீப்பை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த ட்வீட்டை பகிர்ந்திருந்தார்.

  • Bala about Fans Knowledge வாழப்பழத்த ஊட்ட முடியாது.. ரசிகர்களை சீண்டி பார்த்த பாலா!
  • Views: - 1696

    0

    0