பிரபல உணவகத்தில் சாப்பிட்ட பின் பூஜை செய்த சாமியார்கள்.. மாயமான மோதிரம் : ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 5:50 pm

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பர்கி மண்டலம் நாஸ்கல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வருகிறார்.

இவரது உணவகத்திற்கு போலீரோ வாகனத்தில் வந்த குஜராத்தைக் சேர்ந்த சாமியார் வேடத்தில் சிலர் வந்தனர். அனைவரும் மதிய உணவு சாப்பிட்டனர்.
பின்னர் பணம் கொடுக்காமல் சென்றதால் உரிமையாளர் ஸ்ரீதர் அவர்களை தடுத்து நிறுத்தினார். அவர்கள், ‘நீ ஏதோ பிரச்சனையில் உள்ளாய் உனக்கு அமைதி பூஜை செய்வதாக ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஸ்ரீதர் அணிந்திருந்த தங்க மோதிரத்தைப் போட வைத்து வெள்ளைத் துணியை எடுத்து வரும்படி கூறினார்.

பின்னர் வெள்ளை துணியை கட்டி இந்த துணியை நாளைக் காலை திறக்க வேண்டும் அதற்கு முன்பு திறக்க கூடாது என்று கூறி அங்கிருந்து புறப்பட்டனர். ​​ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஸ்ரீதர், அந்த பத்திரத்தில் கட்டப்பட்ட துணியை திறந்து பார்த்தபோது அதில் மோதிரத்திற்கு பதில் கல் இருப்பதை பார்த்து அந்த போலி சாமியார்களை பிடித்தனர்.

ஓட முயன்றவர்களை கிராம மக்களுடன் சேர்ந்து பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து குஜராத்தை சேர்ந்த 3 போலி சாமியார்கள் அவர்களுடன் வந்த ஒரு டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் வந்த வாகனத்தில் பூஜை சாமான்கள் கிடைத்தன. இதுபோன்ற போலி சாமியார்களின் முட்டாள்தனமான வார்த்தைகளை கேட்டு ஏமாற வேண்டாம் எனவும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 274

    0

    0