மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு வாத்தியார்… நீதிமன்றம் கொடுத்த சரியான தண்டனை..!!
Author: Babu Lakshmanan6 August 2022, 4:32 pm
மாணவ, மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கணக்கு ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேரளா – கன்னூரில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில் பி.இ. கோவிந்தன் நம்பூதிரி என்பவர் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள பால், மணம் மாறாத சிறுமிகளிடம் அவர் தனது பாலியல் இச்சைக்கான கொடூர முகத்தை காட்டியுள்ளார்.
கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த 4 சிறுமிகளுக்கு, பாடம் சொல்லி கொடுப்பது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதோடு, சிறுவன் ஒருவருக்கும் பாலியல் தொல்லையை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அவரை சிறார்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு தளபிரம்ப்பா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
3 சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்,
ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.