இஸ்ரோ தலைவரை ஆரத்தழுவி வாழ்த்து கூறிய பிரதமர் : விஞ்ஞானிகளை சந்தித்து கைத்தட்டி உற்சாகம் அளித்த மோடி!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 8:43 am

சந்திரயான் 3 விண்கல வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளார். அவர், காலை 7 மணிக்கு இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து பேசிகிறார் என தெரிவிக்கப்பட்டது.

அவருடைய வருகையை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவரை காண கட்சியினர், மக்கள் கூடியிருந்தனர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி கூடியிருந்த மக்கள் முன் பேசும்போது, உங்களையும், வெற்றி பெற்ற விஞ்ஞானிகளையும் பார்ப்பதற்கு, என்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

விண்கல வெற்றியின்போது, நான் வெளிநாட்டு பயணத்தில் இருந்தேன். அதனால் என்னால், விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை. அதனால்தான் நாடு திரும்பிய உடனே, பெங்களூருவுக்கு வருகை தந்திருக்கிறேன்.

விஞ்ஞானிகளை சந்திக்க வருகிறேன் என்பதனால், முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியை வரவேண்டாம் என கூறினேன். நான் பெங்களூருவுக்கு வரும்போது, முறைப்படி அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என கூறினேன் என்று பேசியுள்ளார்.

இதன்பின், பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க புறப்பட்டபோது, திரண்டிருந்த மக்களை நோக்கி காரில் நின்றபடியே பிரதமர் மோடி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து, இஸ்ரோ சென்ற அவரை தலைவர் சோம்நாத் மற்றும் பிற விஞ்ஞானிகளை நேரில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி பாராட்டினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்கும் அவர், இஸ்ரோ மையத்திலேயே ஒரு மணிநேரம் இருக்கிறார்.

அந்த ஒரு மணி நேரமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின்பு, விண்கலம் செயல்பாட்டு பணிகளை பற்றி பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கி கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 346

    0

    0