உக்ரைனில் 12வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்..!!

Author: Rajesh
7 March 2022, 9:20 am

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், 21ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராத உக்கிர போராக மாறி வருகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு ரஷ்யா களம் இறங்கினாலும் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி வருகிறது.

ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ரஷ்யா தேடிக்கொண்டுள்ளது.

கடந்த 11 நாட்களாக நடந்து வரும் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போர் விவகாரம், இந்தியர்கள் வெளியேறுவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 12வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?