குஜராத்தில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’: மேளதாளத்துடன் களைகட்டிய வரவேற்பு…வழிநெடுக திரண்ட பொதுமக்கள், தொண்டர்கள்.!!

Author: Rajesh
11 March 2022, 1:05 pm

ஆமதாபாத்: 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையொட்டி குஜராத்தில் நடைபெற்ற வாகன பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் வந்தடைந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து மோடி ரோடு ஷோவாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

விமான நிலையத்தில் இருந்து பாரதிய ஜனதா மாநில தலைமை அலுவலகம் கமலம் வரை பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். இதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுக்க இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா தொண்டர்கள், மோடி ஆதரவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

ரோடு ஷோ முடிவில் பாரதிய ஜனதா அலுவலகத்துக்கு செல்லும் மோடி, அங்கு கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். வழியெங்கும் சாலையில் இருபுறமும் திரண்ட நின்ற பாஜகவினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

4 மாநில சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் அடையாளமாக கையசைத்த பிரதமர், தன்னை வரவேற்ற மக்களுக்கு வாழ்த்துத்தும், நன்றியும் தெரிவித்தார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?