பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் : ஆன்லைன் மூலம் விற்பனை.. இணையதளத்துடன் தேதியும் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2022, 8:42 am

பிரதமர் மோடிக்கு கிடைத்த 1,200 பரிசு பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயணங்களின்போது பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்தவகையில் பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று முதல் 1,200 பரிசு பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த மாதம் 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த ஏலத்தில் “pmmementos.gov.in” என்ற இணையதளம் மூலம் பங்கேற்கலாம்.

ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் சில பொருட்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. டெல்லி இந்தியா கேட் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலையின் மாதிரி, விநாயகர் சிலை, அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி, காசி விஸ்வநாதர் கோவில் மாதிரி போன்றவை முக்கியமானவை ஆகும்.

இதைப்போல பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த விளையாட்டு நினைவுப்பொருட்களும் ஏலத்தில் விடப்படுகின்றன. அந்தவகையில் காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடிக்கு வழங்கிய பரிசு பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த தகவல்களை மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 501

    0

    0