திமுக சொல்றது சரியா? இல்லையா? பிரதமர் மோடி போட்ட உத்தரவு : சென்னைக்கு வரும் மத்தியக்குழு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 8:48 am

திமுக சொல்றது சரியா? இல்லையா? பிரதமர் மோடி போட்ட உத்தரவு : சென்னைக்கு வரும் மத்தியக்குழு!!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண நிதி + சென்னை வடிகால் திட்டத்திற்கு சேர்த்து 1010 கோடி ரூபாய் நிதி மட்டுமே கொடுத்துள்ளது. நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினுளுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு நடத்தினார். பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில்தான் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் – மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரணப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் குழு இன்று தமிழ்நாடு வருகை செய்ய உள்ளது. யல், வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய இன்று சென்னை வருகிறது மத்திய அரசின் குழு. இரண்டு நாள் ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை செய்ய உள்ளது.

வெள்ள பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த பிறகு, அதற்கான விரிவான மதிப்பீட்டை இக்குழு தயாரிக்க உள்ளது. அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி.. நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிவாரணமாக கேட்டுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் 500 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் அறிக்கைக்கு பின் மொத்த தொகை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu