‘காஷ்மீரை மேம்படுத்துவதே இலக்கு’: கிராம சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை..!!

Author: Rajesh
24 April 2022, 2:13 pm
Quick Share

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி மக்களிடையே உரையாற்றினார்.

இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமைக்கப்பட்ட நாளை முன்னிட்டு பிரதமர் மோடி காஷ்மீர் சென்றார். புதிய சுரங்கப்பாதை துவக்கம் 500 கிலோவாட் சோலார் எரிசக்தி திட்டம் துவக்கம், இ சாலை துவக்கம், புதிய அணை நீர்ப்பாசன திட்டம் , ஹை ட்ரோ எலக்ட்ரிக் திட்டம் , டில்லி அமிர்தசரஸ் கத்ரா சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கம் என ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து காஷ்மீர் சம்பா மாவட்டம் பாலியில் நடந்த கிராமசபை கூட்ட விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, இன்றைய திட்டத்தின் மூலம் காஷ்மீர் வளர்ச்சி பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த பாலி கிராம பஞ்சாயத்து கார்பன் இல்லாத பஞ்சாயத்தாக நாட்டிலேயே விளங்குகிறது. இந்த நாட்டிற்கே காஷ்மீர் முன்மாதிரியாக விளங்க துவங்கி உள்ளது. புதிய சட்டங்கள் மூலம் அனைவருக்கும் அதிகாரம் என்ற நிலையை உருவாக்கி உள்ளேன்.

ஏழைகள், பெண்கள், தலித்துகள் பயன் பெற்றுள்ளனர். அம்பேத்கரின் கனவுகள் நிறைவேற்றப்படுகின்றன. அனைத்து நிர்வாகத்திலும் பெண்கள் இடம்பெற வேண்டும் . பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவோம். பஞ்சாயத்துகளே நாட்டின் முதுகெலும்பு.

கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீரில் தனியாரின் 17 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் 32 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஜனநாயம் , வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக காஷ்மீர் விளங்குகிறது. புதிய காஷ்மீரை உருவாக்குவோம். கல்வி, வேலை வாய்ப்பு ,சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்டவைக்கே முக்கியத்துவம் வழங்குவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1187

    0

    0