ஒன்றரை மணி நேரம் காங்கிரஸ், திமுகவை விமர்சித்த பிரதமர் : கடுப்பாகி வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 7:53 pm

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும், இந்தியா கூட்டணி குறித்தும் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிய பிரதமர், மணிப்பூர் குறித்து எதுவும் பேசாததால், மணிப்பூர் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். அதன்பின்னும் பிரதமர் மணிப்பூர் குறித்து பேசாததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகளின் வெளிநாடாபுக்கு பின் பிரதமர் மணிப்பூர் குறித்து பேச தொடங்கினார். அப்போது பேசிய அவர், உண்மையைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து நீண்ட விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் அமித்ஷா மேற்கொண்டார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமைச்சர் அமித்ஷா நேற்று விரிவான விவரங்களை அளித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயமாக அமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன். மணிப்பூருடன் நாம் அனைவரும் நிற்கிறோம். விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரவாக உள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஒரு உத்தரவு தான் மிகப்பெரிய வன்முறையை தூண்டி விட்டுள்ளது. மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய மாநில அரசுகள் முழுமையாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பாரதமாதா பற்றி மோசமான முறையில் சிலர் பேசியதில் ஒட்டுமொத்த இந்தியாவும் வருத்தம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாரதமாதாவிற்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. நாடு மூன்று துண்டுகளாக பிரிய காரணமாக இருந்தவர்கள் பாரதமாதா கொலை செய்யப்பட்டதாக பேசுகிறார்கள்.

பாரதமாதா கொலை செய்யப்பட்டதாக இவர்களால் எப்படி பேச முடிகிறது. வந்தே மாதரம் என்ற முழக்கத்தையும் காங்கிரஸ் கட்சி அவமானம் செய்திருக்கிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே தலையாய கடமை என தெரிவித்துள்ளார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?