வினேஷ் போகத் வெற்றிக்கு வாழ்த்து சொல்லாத பிரதமர் தகுதி நீக்கத்துக்கு உடனே ட்வீட் : முதலமைச்சரின் டவுட்!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 11:29 am

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரம் இந்திய மனங்களை கலங்கடித்துள்ளது. உலக சாம்பியனை முதல் சுற்றில் வெளியேற்றி சாதித்த வினேஷ் போகத், 50 கிலோ எடையை விட 100கிராம் கூடுதலாக உள்ளதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அவருக்கு இந்திய ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நேற்று பிரதமர் மோடியும் தனது X தளப்பதிவில் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவத்மான் ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது என்றும் பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க வேண்டாமா? அவர்கள் என்ன விடுமுறையை கழிக்க பாரிஸ் சென்றார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்திய வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வினேஷ் போகத் முதல் சுற்றில் வென்ற போது வாழ்த்து சொல்லாத பிரதமர் மோடி, தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் பிரதமர் உடனே ட்வீட் செய்தது குறித்து சந்தேகத்தையும் கிளப்பியுள்ளார்.

தமிழக முதல்வர், பஞ்சாப் முதல்வர் உள்பட பலரும் வினேஷ் போகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு தகுதி நீக்கத்தை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 935

    0

    0