கொலை மிரட்டல் விடுத்த பிரியங்கா காந்தியின் P.A… பிக் பாஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்தது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 1:33 pm

இந்தி பிக் பாஸ் சீசன்-16 இன் முதல் 5 இறுதிப் போட்டியாளரான அர்ச்சனா கவுதமின் தந்தை காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் (பிஏ) தனி செயலாளரான சந்தீப் குமார் மீது புகார் அளித்துள்ளார்.

பார்ட்டபூர் காவல் நிலையத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் அர்ச்சனா கவுதமின் தந்தை. அதன்படி, சாதி வார்த்தை சொல்லி திட்டியுள்ளார் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அர்ச்சனா கவுதம் பேஸ்புக் லைவில் கூறி உறுதிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்திக்க தனது மகள் அவரின் பிஏவான சந்தீப் சிங்கிடமிருந்து பேசியுள்ளார். ஆனால், அவர் அவளை பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த மறுத்துவிட்டார். அர்ச்சனாவுடன் பேசும் போது அவர் சாதி பெயரையும், அநாகரீகமான சொற்களையும் பயன்படுத்தினார்.

இதைத் தவிர, அவர் கொலை செய்வதாகவும் மிரட்டினார் என்று அர்ச்சனா கவுதமி தந்தை குற்றம் சாட்டினார். இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று எஸ்.பி. மீரட் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!