ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 6 பேருக்கு சிக்கல் : மத்திய அரசு கடும் எதிர்ப்பு… உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!
Author: Udayachandran RadhaKrishnan17 November 2022, 10:19 pm
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை விடுவித்து நவம்பர் 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் கடந்த திருச்சி சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை விடுவித்து நவம்பர் 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.