ஊருக்குள் புகுந்த புலியை அடித்தே கொன்ற மக்கள்…பெண்கள் உள்பட 64 பேர் மீது FIR: வனத்துறையினர் நடவடிக்கை..!!

Author: Rajesh
29 April 2022, 10:52 pm
Quick Share

உத்தரப்பிரதேசம்: கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தில் மூன்று வயது சிறுத்தையை அடித்துக்கொன்றது தொடர்பாக 10 பெண்கள் உட்பட 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் புதன்கிழமை அதிகாலையில் கதர்னியாகாட் சரணாலயத்திற்குள் உள்ள கத்தோடியா கிராமத்தில் புகுந்த சிறுத்தை, வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 13 கிராம மக்களை காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை வலை வீசி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு கூடியிருந்த அப்பகுதி கிராம மக்கள் சிறுத்தையை சுற்றி வளைத்து கட்டையால் தாக்கிக் கொன்றனர்.

கிராம மக்களின் தாக்குதலின்போது வனத்துறை ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம், அரசுப்பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது ஊழியர்களைத் தாக்குதல் மற்றும் அரசுப் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிராம மக்கள் 64 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வன அதிகாரி ஆகாஷ்தீப் பாதவான் தெரிவித்துள்ளார்.

மேலும், மூர்த்திஹா காவல் நிலையத்தில் வனத்துறையினரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 1460

    0

    0